தகுதி -5ஆண்டு படிப்பு

தமிழ்நாடு அரசின் மேனிலைத்தேர்வுக்கு இணையான சிண்டிகேட்டினால் அங்கீகரிக்கப்பட்ட 10+2 மாதிரியின் கீழ் 45% மதிப்பெண்களுக்குக் குறையாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்குத் தகுதியுடையவர்கள்.

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எல்எல்பி 5 ஆண்டு பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கு தேவையான மதிப்பெண்களில் 5% மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும்.

தகுதி -3ஆண்டு படிப்பு

தமிழ்நாடு அரசின் மேனிலைத்தேர்வுக்கு இணையான சிண்டிகேட்டினால் அங்கீகரிக்கப்பட்ட 10+2+3 அல்லது 11+1 க்குப் பிறகு பரஸ்பர அங்கீகாரத்திற்காக புது தில்லியில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கங்களின் உறுப்புப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மூன்று ஆண்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டு பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரத் தகுதியுடையவர்கள்.

தகுதி -முதநிலைப்பட்டப்படிப்பு

எல்.எல்.பி. சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 50 % மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றுள்ளவா எல்.எல்.எம். சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். டடதமிழ்நாடு அரசின் மேனிலைத்தேர்வுக்கு இணையான சிண்டிகேட்டினால் அங்கீகரிக்கப்பட்ட 10+2+3 அல்லது 11+1 க்குப் பிறகு பரஸ்பர அங்கீகாரத்திற்காக புது தில்லியில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கங்களின் உறுப்புப்பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மூன்று ஆண்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டு பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரத் தகுதியுடையவர்கள்.

இருப்பினும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு தேவையான மதிப்பெண்களில் 5% மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும்.