பருவத்தேர்வு முறை

எல்.எல்.எம் பட்டப்படிப்பானது நான்கு பருவங்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பருவமும் 90 வேலை நாட்களைக் கொண்டிருக்கும்.

பருவ முறை தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செமஸ்டில் ஒரு விண்ணப்பதாரருக்கு செய்யப்படும் தொடர்ச்சியான மதிப்பீடு இறுதியானது. எந்தவொரு விண்ணப்பதாரரும் தொடர்ச்சியான மதிப்பீட்டை முடிக்கத் தவறினால் அந்த விண்ணப்பதாரர் அடுத்த பருவத்தில் ரூ.500 கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி அதே உள் மதிப்பீட்டை மீண்டும் செய்ய அனுமதிக்கப்படுவார்.

ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தாள்கள்

முதல் பருவத்தேர்வில் அனைத்து கிளைகளுக்கும் பொதுவான நான்கு கட்டாயத்தாள்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்தேர்வில் இரண்டு முக்கியப்பாடங்கள் மற்றும் பிராக்டிகல் தாள் ஒன்று பரிந்துரைக்கபடுகிறது. தவிர பல்கலைக்கழகம் வழங்கும் பாடங்களின் பட்டியலிருந்து ஒரு விருப்பத்தாள் மாணவரால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். மூன்றாம் பருவத்தேர்வில் மூன்று முக்கியப்பாடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. நான்காம் பருவத்தேர்வில் ஒரு முக்கிய பாடத்தாள் மற்றும் ஒரு ஆய்வுக்கட்டுரை பரிந்துரைக்கப்படுகிறது.

முக்கியப்பாடங்கள்:

நான்காவது பருவத்தில் ஒரு மாணவர் எல்.எல்.எம். பட்டப்படிப்பை ஓரளவு நிறைவு செய்யும்வகையில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். வழிகாட்டியுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாடத்தின் மீதான ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆய்வுக்கட்டுரை அமையும். ஆய்வுக்கட்டுரை 100 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரையின் பொருள் மூன்றாம் பருவத் தேர்வின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் மற்றும் நான்காவது பருவத்தின் கடைசி வேலை நாளுக்கு முன் ஆய்வுக் கட்டுரை சமாப்பிக்கப்படவேண்டும். ஆய்வுக்கட்டுரை 200 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். இதில் விவா வோசுக்கு 50 மதிப்பெண்கள் அடங்கும். ஆய்வுக்கட்டுரையின் மதிப்பீடு மற்றும் விவா வோசு நடத்துவது இரண்டு தேர்வாளர்களால் மேற்கொள்ளப்படும். ஒருவர் உள் தேர்வாளர் மற்றொருவர் வெணி தேர்வாளர். விவா வோசில் மாணவர் ஆய்வுக்கட்டுரையின் கருப்பொருளில் ஆய்வு செய்யப்படுவார்.

4வது பருவத்தில் விவா வோசில் கலந்து கொள்ளத் தவறிய விண்ணப்பதாரர் முதல்வரின் குறித்த பரிந்துரையின் பேரில் அடுத்த பருவத்தில் விவா வோசில் கலந்து கொள்ளகட்டணமாக ரூ.1000 செலுத்துவதின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்.

தேர்ச்சி குறைந்தபட்சம்

ஒவ்வொரு தாளுக்கும் எழுத்துத் தேர்வுக்கு 70 விழுக்காடு மதிப்பெண்களும், தொடர்ச்சியான மதிப்பீட்டின் மூலம் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்கப்படும்.எழுத்துத்தேர்வு மற்றும் தொடர்ச்சியான மதிப்பீட்டிற்குத் தனித்தனியான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 50 விழுக்காடு ஆகும்.

தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரரின் வகைப்பாடு

60 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள். 50 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற மற்றும் 60 விழுக்காட்டிற்குக் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள். மொத்தத்தில் 75 விழுக்குக்காட்டிற்கு மேலான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனிச்சிறப்புடன் தேர்ச்சி பெற்றவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள்.

இரண்டு வருட காலஅளவிற்குள் முதல் முயற்சியிலேயே அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்கள் தரவரிசைக்கு தகுதி பெறுவார்கள். ஒரு மாணவர் அனைத்து பாடத்தேர்விலும் தேர்வுக்கு வராதிருக்கும்பட்சத்தில் அவர் பருவத்தேர்வு முடிந்ததும் தரவரிசைக்கு தகுதி பெறமுடியாது.

வருகை:

ஒவ்வொரு பருவத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட வருகைப் பதிவேடில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகை இருந்தால் மட்டுமே ஒரு விண்ணப்பதாரர் பருவத்தேர்வை எழுத தகுதியுடையவராவார்.

தொடர் மதிப்பீடு

தொடர்ச்சியான மதிப்பீட்டில் பின்வருவன அடங்கும்.

கற்பித்தல் பயிற்சி / கருத்தரங்கு : 10 மதிப்பெண்கள்

தேர்வுத்தாள் / கட்டுரை : 15 மதிப்பெண்கள்

வருகை : 05 மதிப்பெண்கள்

*வருகைக்கான மதிப்பெண்கள் பின்வரும் மதிப்பீட்டின் அடிப்படையில் அமையும்.

  • 75% : 2.5
  • 76% – 80% : 3.0
  • 81% – 85% : 3.5
  • 86% – 90% : 4.0
  • 91% – 95% : 4.5
  • 96% – 100% : 5.0

தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் மாறும் விதிமுறைகளுக்கு ஏற்ப இது மாற்றத்திற்கு உட்பட்டது.

இணைப்பு:

எங்கள் கல்லூரி தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தகுதி

1.சேர்க்கை நடைமுறை

2. கட்டண அமைப்பு

தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி